தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே, அதுவும் வித்தியாசமான படங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது புகழேந்தி எனும் நான் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தப்படியாக ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷ் தயாரிக்கிறார். இயக்குநர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
தற்போது, கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி என நான்கு படங்களில் நடிக்கிறார் ஜீவா, இவற்றை முடித்த பின்னர் அருள்நிதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.






