மட்டக்களப்பு குடியிருப்பு சித்த
ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு “ சுதேச
மருத்துவத்தின் ஊடாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ‘ எனும் தலைப்பின் கீழ்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் ,கண்காட்சியும் வைத்திய
அத்தியட்சகர் வைத்தியர் திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரன் தலைமையில் வைத்தியசாலையில் நடைபெற்றது
வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்
திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரன் தலைமையில்
நடைபெற்ற மருத்துவ முகாமில் நீரிழிவு தொடர்பான ஆலோசனைகளும் நீரிழிவு நோயினை
கட்டுப்படுத்துவதற்கான யோகா
பயிற்சிகளும் உணவுக்காக பயன்படுத்தப்படும்
உணவு வகைகள் ,மூலிகைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கான இரத்த
பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு நோயிகளுக்கான
மருந்துகளும் வழங்கப்பட்டன
நடைபெற்ற மருத்துவ முகாமில் குடியிருப்பு
சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்
.
