நேற்றைய பதிவின் முழு விளக்கம் மூன்றின் மகத்துவம் புரிந்து கொள்வோம்
அகிலத்தில் மூன்றின் மகத்துவம் ஒரு மனிதன் கருவாகும் போதே உருவாக்கம் பெறுகின்றது. தந்தையாகிய ஆணும் தாயாகிய பெண்ணும் கலப்பதனால் மட்டும் உயிர்கொண்ட கரு பிறப்பெடுத்து விடுவதில்லை அது குறையின்றி பிறப்பெடுக்க இறையென்ற துணை வேண்டும் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த உயிர்கொண்ட கரு புவனத்தில் வாழ உணவு உடை உறையுள் என்னும் மூன்று தேவைகள் அத்தியாவசியமாகின்றது. ஆனால் இந்த மூன்றையும் மட்டும் நாட்டம் கொண்ட உயிர்கள் தரணியில் பிறந்து வாழ்ந்து இறந்து மீண்டும் பிறந்து வாழும் தொடர்கதையாகவே இயற்கையின் சுழற்சி பல உயிரினங்களை ஆக்கிவைகின்றது.
இது எல்லா ஜீவராசிக்களுக்கும் பொருந்தும் என்றாலும் என் இந்த பதிவானது மனிதர்களை சுற்றியே நகர்கின்றது.
நான் மேலே குறிப்பிட்டபடி மூன்று காரணிகளால் பிறப்பெடுத்து மூன்று விடயத்தால் நிலையெடுத்து வாழத்தொடங்கும் மனிதனுக்கு ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்ககளும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கின்றன. இந்த மாயங்களை பற்றி அறியும் மனிதன் தான் என்னும் உடல் உயிர் மனம் என்னும் மூன்று வெவ்வேறு தன்மைகளை கண்டு பதி பசு பாசம் என்னும் முப்பொருட்களையும் அடையாளம் கானத்தொடங்குவதனால் வாழ்க்கை என்னும் வட்டத்தில் இறந்தகாலம் நிகழ்காலாம் எதிர்காலம் என்னும் மூன்று காலத்திலும் சிறப்பாகவே வாழ்ந்து முடிக்கின்றான்.
இதனயும் தாண்டி இவை அனைத்தையும் அடையாளம் காணும் மனிதனுக்கு மட்டுமே தேகத்தின் மூன்றுவிதமான தன்மைகள் தெரிய வரத்தொடங்கிவிடுகின்றன.
நாம் எம் வெறும் கண்ணால் காணும் சரீரம் எம்மை மிக மிகத் தூய்மையாக்க எமது தேகம் சுத்த தேகம் என்படும் நிலைக்கு எட்டவைத்துவிடுகின்றது. இந்த சுத்த தேகத்தின் விளக்கமானது வெறும் புறச்சுத்தம் மட்டும் குறிப்பிடபடவில்லை மாறாக அகச்சுத்தத்தையே குறித்து நிற்கின்றது.
சுத்ததேகத்தின் சிறப்பினாலும் கடும் பயிற்சியினாலும் பிரணவ தேகம் என்னும் ஒளியுடலை எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனை துல்லியமாக அறிந்து கொள்ளும் ஒருவனுக்கு ஞானதேகத்தின் வாசல் கதவுகள் தானகவே திறக்கப்படுகின்றன.
இந்த ஞானதேகத்தில் வாழும் ஞானிகளைப்பற்றி நான் அதிகம் கூறப்போவதில்லை இதனை அனுபவரீதியக அனுபவித்து உண்ர்த பலருக்கு அவர்களின் ஆசிர்வாதங்களினால் நடந்த அற்புதங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கை என்பதே எம்மை நாம் உணர்ந்து எம்மைப்பற்றி அறிந்து தெளிந்து காலன் வரும்வரை வாழும் காலப்பகுதியாகும்.
“எம்மை செதுக்கி எமக்குள் சிவம் செய்து கொள்ளுவோம்”
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
