
முத்துக்கழுவன் தனது தோட்டத்தில் 4
பசுமாடுகள் வைத்து வளர்த்து வந்தார்.
இன்று பொழிந்த கனமழை காரணமாக அவர் வீட்டிற்குள் இருந்த நிலையில் பசுமாடு ஒன்று அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாகவும் சத்தம் கேட்டு ஓடி வந்த முத்துக்கழுவன் உறவினர்கள் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தாக கூறப்படுகிறது.
முத்துக்கழுவன் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு நிலைய அலுவலர் காராமணி தலைமையிலான அதிகாரிகள் 100 அடி ஆழ கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
மேலும் கிணற்றில் தடுப்புச் சுவர்கள் இல்லாததாலும் மழை காலங்களில் ஈரப்பதம் இருந்ததாலும் மாடு தவறி விழுந்திருக்கலாம் எனவும், கிணற்றில் தடுப்புச்சுவர் கட்டவும் மழை காலங்களில் கிணற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
