
இவ்வீதியானது பூவரசந்தீவு இடிமன், சாமாச்சந் தீவு, சல்லிக் கிளப்பு பாலம் ஊடாக நடுவூற்று சென்றடையும் வீதியாக உள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகள் உட்பட மஹரூப் நகர், சின்னத் தோட்டம், சின்னக் கிண்ணியா, பிரதேச மக்களால் நாளாந்தம் இவ்வீதி பயணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
இவர்கள் தினமும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவே, இப்பிரதேச மக்களின் நலன் கருதியும், பயனாளிகளின் நலன் கருதியும் வீதியை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(ந)
