
கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீனத் தூதரக அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கை வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றது.
இலங்கையின் தற்போதைய சர்ச்சைக்குரிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சீனத் தூதுவர், இலங்கை அரசின் உயர்மட்டங்களுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.(ந)
