இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த ராஜபக்ஷ தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக இத்தாலியில் உள்ள ராஜபக்ஷ ஆதரவு குழுவினர் பல மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை கண்டுள்ள ராஜபக்ஷ தரப்பு, ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்துவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஐக்கிய தேசிய குழுவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
சூழ்ச்சிகள் மூலம் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு ராஜபக்ச தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் அமைதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பெயரில் வலைத்தள பக்கங்களை ஆரம்பித்து, அந்த தரப்பிற்கு எதிராகவே செய்திகளை பதிவிட்டு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்காக 4 மில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் வாழும் வசந்த என்ற நபர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த பணம் இலங்கையில் இருந்து வங்கி ஊடாக இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)
Attachments area
