
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறந்த கல்வி வசதிகளுக்காக போராடிய இந்த பழங்குடியின சமூகளுக்கு, இதுவொரு சரித்திர வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
Bunibonibee Cree Nation, God’s Lake First Nation, Manto Sipi Cree Nation, Wasagamack First Nation ஆகிய நான்கு பழங்குடியின சமூகங்களுக்கே குறித்த பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து சுதேசிய சேவைகள் அமைச்சர் ஜேன் பில்பொட் கூறுகையில், “இந்த நான்கு சமூகங்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது, கனடாவிற்கு இது முதன்மையான மக்களுடன் கையொப்பமிட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களில் ஒன்று இதுவாகும்’ எனக் கூறியுள்ளார்.
