
இந்த விடயத்தை ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வீதிகளையும், வீதியோர நடைபாதைகளையும் பாவனைக்கு ஏற்ற வகையில் வைத்திருப்பதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பனிக் காலத்தினை எதிர்கொள்வதற்கு முற்கூட்டியே ஆயத்தமாக உள்ளோம். எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள பனிப்பொழிவும் அதனால் ஏற்படும் நிலைமைகளையும் சமாளிப்பதற்கு 1,500இற்கும் அதிகமான பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
குறித்த அந்த 1,500இற்கும் அதிகமான பணியாளர்களும் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பதனை உறுதிசெய்ய எம்மால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 90 மில்லியன் டொலர்கள் நிதி உதவிகரமாக இருக்கும்
குறித்த பணியாளர்களுடன, வீதிகளில் பனியினை தள்ளும் வாகனங்கள் 600, நடைபாதை பனியினை அப்புறப்படுத்தும் வாகனங்கள் 300, உப்பு தூவும் வாகனங்கள் 200, ஏனைய வாகனங்கள் 400 என பல்வேறு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது” எனக் கூறினார்.
