 ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கு என்ன என்பதற்கான விடையினை சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கு என்ன என்பதற்கான விடையினை சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.அத்துடன் சவூதி அரேபியாவுடனான உறவுகளை உலகின் பல நாடுகளும் மறுபரிசீலனை செய்துவரும் நிலையில், சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான எதிர்கால வர்த்தக உடன்பாடுகள் குறித்து தாமும் சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வோசிங்டன் போஸ்ட் ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்த ஒலிப்பதிவினை தமது புலனாய்வு அதிகாரிகள் செவிமடுத்ததான தகவலை இந்த வார தொடக்கத்தில் பிரதமர் ரூடோ வெளிப்படுத்தியிருந்தார்.
மேற்குலக நாடுகளின் தலைவர்களில் முதலாவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவே இவ்வாறானதொரு தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
