சபாநாயகர், தெரிவுக்குழுவை சட்டவிரோதமாக தெரிவு செய்துள்ளார் என்றும், இந்த விடயத்தில் அவர் சர்வாதிகாரமாக செயற்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர், தெரிவுக்குழுவை சட்டவிரோதமாக தெரிவு செய்திருந்தார். அவர் சர்வாதிகாரமாக செயற்பட்டுள்ளார். அவர் தனக்கு இல்லாத அதிகாரத்தை கைப்பற்றவே இவ்வாறான செயற்றிட்டங்களை மேற்கொள்கிறார்.
சிறிக்கொத்தவை போல நாடாளுமன்றத்தை மாற்ற அவர் முயற்சிக்கிறார். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனாலேயே நாம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கிறோம்.
அவர் தொடர்ச்சியாக அரசமைப்பையும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறும் வகையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். உலகில் எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு செயற்பட்டதில்லை. இது இலங்கை வரலாற்றில் பதியப்படும்.” என தெரிவித்துள்ளார்.
