
ஜி-20 நாடுகளின் 13 ஆவது உச்சி மாநாடு ஆர்ஜென்டீனா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.
இன்று மாலை அர்ஜென்டினா தலைநகரம் புய்னோஸ் எய்ரேஸசை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜி-20 நாடுகளில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஜி-20 அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்
