
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த நவம்பர் 11 ஆம் திகதி முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
