திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவர் கனகசபை தேவகடாட்சம் தெரிவிப்பு.!
இன்றய கால ஒட்டத்தில் கல்விஒரு கடைவியாபாரமாகி விட்டது. இலவசக்கல்வி என்ற பெயரில் பெரும் வியாபாரம் நடப்பதை அனைவரும் அறிவோம் இந்த நிலையில் தமிழருக்கு அசையாத ஒரு சொத்தாக இருப்பது கல்வி மட்டுமே, ஒரு காலத்தில் கிறீஸ்தவ மத திணிப்பும் தரமான கல்வியும் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது இவற்றை முறையாக வளமாக்கிக் கொண்டவர்கள் தமிழர்களே, அதுவே பேரினவாதிகளின் சிந்தையை தூண்டியது அதன் பிரதிபலிப்புகளில் ஒன்றுதான் யாழ் நூலக எரிப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பரீட்சையில் அடைவு மட்டத்தை அடையாத புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சோர்வடைந்து கல்வியை தொடராமல் விடக்கூடாது இதற்கான முமுப் பலத்தையும் ஊக்கத்தையும் பெற்றோர், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் போன்றோர் ஏற்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவர் கனகசபை தேவகடாட்சம் திங்கட்கிழமை (26) திருகோணமலை, கும்புறுப்பிட்டி கனிஷ்ட பாடசாலையின் 05 தர புலமைப்பரிசில் மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்புரையாற்றும் போது குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் எஸ். விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் உட்பட கெளரவ, சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
(அ . அச்சுதன்)
