LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 27, 2018

மருதமுனையின் எதிர்காலம் தொடர்பில் திட்டமிட வேண்டிய பொறுப்பை அரச சேவையாளர்கள் சுமந்திருக்கின்றனர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்.

 கல்வியில் முன்னேறிய ஒரு பிரதேசமாக ஏனையோரினால் அவதானிக்கப்படுகின்ற மருதமுனையின் எதிர்காலம் தொடர்பில் திட்டமிட வேண்டிய பாரிய பொறுப்பை இப்பிரதேசத்தை சேர்ந்த அரச சேவை உத்தியோகத்தர்கள் சுமந்திருக்கின்றனர் என மருதமுனை அரச சேவையாளர் அவையத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருதமுனை அரச சேவையாளர் அவையத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.மருதமுனை கலாச்சார மண்டபத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவையத்தின் தலைவர் அன்சார் மேலும் கூறியதாவது;

"எமது மருதமுனை பிரதேசத்தில் ஆசிரியர்கள் தவிர அரச சேவையாளர்கள் சுமார் 800 பேர் இருக்கின்றனர். இவர்களது நலன்களைப் பேணுவதற்கும் ஊர் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஓர் பலமான அமைப்பு அவசியம் என்று நீண்ட காலமாக உணரப்பட்டு வந்திருக்கிறது. அதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் வெற்றியளித்திருக்கவில்லை. என்றாலும் அண்மைக்காலமாக சில முக்கியஸ்தர்களின் இடைவிடாத பாரிய முயற்சியினால் தற்போது சாத்தியமாகியுள்ளது.

இந்த அமைப்பானது அரச சேவையாளர்களின் நலன்களை மேம்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது மாத்திரமல்லாமல் இப்பிரதேசத்தின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரித்தல், இளைஞர்களுக்கான வழிகாட்டல்களை முன்னெடுத்தல், ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்புதல், பொருளாதார முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களை கையாள்வதற்கு முன்னிற்க வேண்டும் என்ற பாரிய இலக்குகளை மையப்படுத்தியே நிறுவப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இப்பிரதேசத்திலுள்ள அனைத்து அரச சேவையாளர்களையும் ஒன்றிணைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பை கட்டுக்கோப்புடன் முன்னெடுத்து செல்வதற்காக மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப் அவர்களினால் சிறந்த யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகமானது இரண்டு வருட ஆயுளை கொண்டதாக இருக்கும்" என்றார்.

இதன்போது அமைப்பின் யாப்பை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நாயகம் எம்.எப்.ஹிபத்துள் கரீம் சமர்ப்பித்து, விளக்கமளித்தார்.அத்துடன் 15 பேர் கொண்ட ஆளுநர் சபையும் நிர்வாக உத்தியோகத்தர்களும் தலைவரினால் பிரகடனம் செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கிழக்கு மாகாண கால்நடைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எம்.பாஸி, மாகாண முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் ஐ.எல்.எம்.அக்ரம், கலாநிதி ஏ.எம்.பாஸில், அமைப்பின் செயலாளர் எம்.என்.எம்.றம்சான், பொருளாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், ஆசியா பவுண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், நன்னடத்தை அலுவலக பொறுப்பதிகாரி எம்.என்.எம்.றபாஸ் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் அரச சேவையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

(மருதமுனை தினகரன் நிருபர்)



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7