LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 27, 2018

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என தொடங்குபவர் 140 ஆயிரம் எமது உறவுகளை கொன்று குவித்த அரசுடன் இணைந்து இரத்தம் தோய்ந்த கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்'-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் -

                         (சிறப்பு நிருபர்  தீபன்)
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என தொடங்குபவர் 140 ஆயிரம் எமது உறவுகளை கொன்று குவித்த அரசுடன் இணைந்து இரத்தம் தோய்ந்த கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இரத்தம் தோய்ந்த கரத்தை முத்தமிடுவதற்காகவா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்புஇ செங்கலடி பதுளை வீதியில் கொடுவாமடு கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (26) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்  


அவர் தொடரந்து உரையாற்றுகையில் - இந்த நாட்டில் தமிழர்களுடைய அரசியல் என்பது வரலாற்றுடன் கூடிய அரசியலாகும். நாம் அபிவிருத்தியை மாத்திரம் நோக்கியவர்களாக மேலாதிக்க சிங்களவர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் 
   சிலாபத்தில் தமிழர்கள் இந்துக்களாக இருந்த காரணத்தினால் முன்னேஸ்வரம் என்ற சிவன் ஆலயம்  அமைக்கப்பட்டிருந்தது. இங்கே ஆலயமும் உள்ளது தமிழர்களின் எச்சசொச்சங்களும் மாத்திரமே இருக்கின்றன. சிலாபம் பிரதேசத்தில் 36 கிரமங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு வாழ்ந்த தமிழர்கள் எங்கே போய்விட்டார்கள். 

இங்கிருந்த அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை மாத்திரமாக கருத்திற்கொண்டு செயற்பட்டதன் காரணமாக பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது வாய்ப்புக்கள்இ வசதிகள் அங்கு உள்ளன. ஆனால் எங்களுடைய மொழிஇ இனம்இ காலசாரம் அழிந்துவிட்டது. முன்னேஸ்வர ஆலயம் மாத்திரம் எஞ்சியுள்ளது.

கதிர்காமத்திலே முருகன் இருக்கின்றார். கதிர்காம முருகனை வணங்கிய தமிழன் எங்கே? அவர்கள் ஏன் அழிந்தார்கள் ? போர்வந்து அழியவில்லை. அவர்கள் தங்களை மறந்தார்கள். வெறுமனே அபிவிருத்தியை மாத்திரம் நினைத்து அங்குள்ள சிங்களப் பெரும் பான்மையினருடன் இணைந்து தங்களுடைய நிலைகளை இழந்து காணாமல் ஆகிவிட்டார்கள். இதே போன்று காலியிலும் இந்த நிலமைதான் இருந்தது. 

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்குரிய இனத்துக்கோஇ மொழிக்கோஇ நிலத்துக்கோ ஏற்ற திட்டங்களை முன்மொழியமாட்டார்கள் .எனவே  1920ம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு இந்த நாட்டில் அரசியல் தேவை என எமது தலைவர்கள் நினைத்தார்கள். 

சிங்களவர்கள் அவர்களுடைய இனத்தவரை எமது மண்ணில் குடியேற்றுவதற்கே முயற்சிப்பார்கள். அம்பாறைஇ திருகோணமலையில் எமது நிலங்களை இழந்துள்ளோம். 

நாங்கள் விழிப்பாக இல்லாமல் பெரும் தேசியத்தோடு சேர்ந்து அபிவிருத்திக்காக அலைந்து திரிந்ததன் காரணமாக 10 தலை இராவணன் ஆட்சியிலிருந்த மண்ணில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிரசுக் கட்சியிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சி மாறி அரசியல் செய்து அபிவிருத்தி செய்ய முயற்சித்தவர்கள் உள்ளார்கள். அவர்களுடைய நிலையை சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் தடம்புரண்டு செல்கின்றாரோ அப்போது அவர்களை எமது மக்கள் அடையாளம் கண்டுவிடுவார்கள். 

எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று உரையினை ஆரம்பிக்கும் போது ஒருவர் கூறித் தொடங்குவார் . இப்போது எதைக் கூறித் தொடரங்கப் போகிறார். எம்முடன் இருந்து சங்கு முழங்கியவர் . அவர் எமக்கு எதிராக சங்கு ஊதுகிறார். அவரால் தமிழரின் வாழ்வும்இ நிலமும் அழியப் போகிறது.  

எமது 140ஆயிரம் உறவுகளை ஒரு வாரத்திலே கொன்று ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசு. இரத்தம் தோய்ந்த கரங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எம்முடையவர்கள். இந்த கரத்தை முத்தமிடுவதற்கா எங்களுடைய கரங்களால் உங்களுக்கு வாக்களித்தோம் என்பதை எமது மக்கள் அவரிடம் கேட்க வேண்டும்.    

நாங்கள் தமிழர்கள். எங்களுக்கு மானம் உண்டு .எங்களுக்குரிய மொழி.இனம் என்ற உணர்வு உண்டு. இதற்கு பின்புதான் நாங்கள் கௌரவமான பாதுகாப்பான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வோம். இந்த அபிவிருத்தியில் சிங்கள பேரினவாதம் உள்ளே நுழைந்துவிட இடமளிக்க மாட்டோம்.

சிங்கள கட்சிகளுடன் இணைந்து செய்யப்படும் அபிவிருத்தி சிங்கள தேசியவாத விதைப்பாக அவர்களின் ஊடுருவலாகஇ உள்வாங்கலாக அவை அமையும். இதற்கான வாயில்களாக எம்மைவிட்டு மாறிச் செல்பவர்கள் இருப்பார்கள். 

அரசாட்சியில் நாங்கள் இருக்கப்போவதில்லை. ஆனால் எங்களுடைய மக்களுக்கான தேவைகளை கௌரவத்தோடு கொண்டுவருவோம். 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7