LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 16, 2018

சிவில் சமூக அமைப்புக்களின் உள்வாங்கல் மற்றும் ஆளுகைத்திறன்களை கட்டியெழுப்புதல்

ஐரோப்பிய ஒன்றித்தின் நிதியுதவியுடன் 'சிவில் சமூக அமைப்புக்களின் ;
உள்வாங்கல் மற்றும் ஆளுகைத்திறன்களை கட்டியெழுப்புவதனூடாக
நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தல்' திட்டமானது இடம்பெற்று வருகிறது. இத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக பிராந்திய வட்டமேசை
மாநாடு திருகோணமலை ஜேகப்பாக் ஹோட்டலின் மாநாட்டு
மண்டபத்தில்  கிழக்கு மாகாண சபையின் பிரதம
செயலாளர்
சரத் அபேகுணவர்த்தன அவர்களின் தலைமையில்
திணைக்கள பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும்
அரச அரச சாரபற்ற சேவை வழங்குநர்களின் பங்குபற்றலுடன்
நடைபெற்றது. 

Humanity & Inclusion (New name of Handicap International) மற்றும்  CAMID
நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.இத்திட்டமானது திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும ; அம்பாறை
மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள
பாதிக்கப்பட்ட மக்களின் (பெண் தலைமை தாங்கும்  குடும்பங்கள்,
மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள்)
பொருளாதார பாதிப்புகளை வெளிக்கொணருவதாக உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்
சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகளை அடையாளங்கண்டு
அவற்றை தீர்த்துக்கொள்வதற்கான வழிவகைகளை பெற்றுக்கொள்ளவும்
இத்திட்டம் உதவிபுரிகின்றது.

இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக சிவில் சமூக அமைப்புகளை
வலுப்படுத்தி அவர்களை பொருளாதார அபிவிருத்தியின் பங்காளர்களாக
உருவாக்குவதாகும்.

அத்துடன் நிலையான அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் கிழக்கு
மாகாணத்தில் விவசாய திணைக்களம், கால்நடை அபிவிருத்தி மற்றும்
சுகாதார திணைக்களம், மீன்பிடி திணைக்களம், கிராம அபிவிருத்தி
திணைக்களம் அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் கொள்ளளவும்
பாதிக்கப்பட்ட மக்களையும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில்
உள்வாங்குவது தொடர்பாக கொள்ளளவு விருத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், .

இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ( (European Union ) நிதி
உதவியில் 2016 தொடக்கம் 2018 வரை செய்து முடிக்கப்பட்ட
செயற்பாடுகள் பகிரப்பட்டதுடன் திட்டத்தினூடாகப் பயன்பெற்ற
பயனாளிகளின் ஆவணப்படமும் பிரதம செயலாளரினால்
வெளியிடப்பட்டது. அத்துடன் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட
செயற்பாடுளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக அரச
திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் முன்னிலை
உத்தியோகத்தர்களிடம் சிபார்சுகள் முன் வைக்கப்பட்டன.
(அச்சுதன்)






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7