மட்டக்களப்பு மாவட்ட த்தின் 14 பிரதேச செயலகங்கள் ஊடாக 39 தலைப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான
மீளாய்வு கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்தில் இன்று நடைபெற்றது
இன்று இடம்பெற்ற மீளாய்வு
கலந்துரையாடலில் பாராளுமன்ற
உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட
நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கப்படுகின்ற
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும்
கம்பெரலிய , கிராம சக்தி ஆகிய நிகழ்ச்சி திட்டங்களின் ஊடாக
முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு கலந்துரையாடல்கள் நடைபெற்றது .
இதனுடன் இணைந்ததாக 14 பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகின்ற மீள்குடியேற்ற
திட்டங்கள் , குடிநீர் வழங்கல் ,வாழ்வாதாரம் , வீதி புனரமைப்பு ,நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
.இன்று நடைபெற்ற மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட செயலக உதவி
மாவட்ட செயலாளர் எ . நவேஸ் வரன் , மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி
சசிகலா புண்ணியமூர்த்தி , பிரதம கணக்காளர் ஜெகதிஸ்வரன், பிரதேச செயலாளர்கள் , உதவி
பிரதேச செயலாளர்கள் , பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் , கலந்துகொண்டனர்
