
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தோழமை தினமும் தோழர் க.பத்மநாபாவின் 67வது பிறந்த தினமும் திருகோணமலை குளோக்கோட்டன் மண்டபத்தில் 19-11-2018 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும் திருகோணமலை நகரசபையின் உருப்பினருமான சி. சிவகுமார் (சத்தியன்) தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சித்தலைவர் T. ஸ்ரீதரன், செயலாளர் சிவராஜா, கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் வடகிழக்கு மாகாண முதல்அமைச்சர் அ . வரதராஜ பெருமாள் மற்றும் மத்திய குமு உறுப்பினர்கள், தோழர்கள்உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தோழமை தினத்தின் சிறப்பு நிகழ்வாக மக்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
(அச்சுதன்)
