மட்டக்களப்பு மாநகர சபையின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
சேதமடைந்து காணப்படும் வீதிகள் புனரமைப்பு செய்யும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் சிந்தனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர
அபிவிருத்திக்காக நிதிகள் ஒதுக்கீடுகள்
செய்யப்பட்டு மாநகரை முதன்மை படுத்தும் வேலைத்திட்டங்களில் வீதி அபிவிருத்தி
திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இதற்கு அமைய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயம் 5 ஆம் குறுக்கு வீதியினை புனரமைப்பு
செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.,இதேவேளை சத்துருக்கொண்டான் சர்வோதயம் பகுதிகளில் அடாத்தாக வீதிகள் பிடிக்கப்பட்டு சுற்றுவேளிகள் அடைக்கப்பட்டுள்ள உள்ள
வீதிகளையும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் இதற்கான
துரித நடவடிக்கையினை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள
அபிவிருத்தி பணிகளை பிரதி முதல்வர் கந்தசாமி
சத்தியசீலன் , மாநகர சபை உறுப்பினர்களான மதன்
, ரகுநாதன் , தம்பிராஜா , அசோக் மற்றும் மாநகர
சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ் .ராஜ்குமார் ஆகியோர் நேரில்
சென்று பார்வையிட்டடார்
