
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசசபைக்கான புதிய உறுப்பினராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ந.ஹரிஹரகுமார் அவர்கள் பதவியேற்றுள்ளார். 15.11.2018 அன்று அவர் தமிழ்த் தேசிய மக்க்ள முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கலாநிதி இரா.சிறீஞானேஸ்வரன் அவர்களுடன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் கிழக்கு மாகாண பிரதித்தேர்தல்கள் ஆணையாளர் ச .சுதாகரன் அவர்களின் முன்னிலையில் பிரதேசசபை உறுப்பினராகச் சத்தியபிரமாணம் மேற்கொண்டார்.
மூதூர் பிரதேசசபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கி.சத்தியரூபன் அவர்களின் உறுப்புரிமை வறிதானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் முகமாகக் கட்சித் தலைமையால் ந.ஹரிஹரகுமார் உறுப்பினராக முன்மொழியப்பட்டிருந்தார்.
(அச்சுதன் )