சுகாதார ,போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத
திணைக்களமும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்
தொற்றா நோய் சிகிச்சை ஆயுர்வேத நடமாடும் இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு ஜெயந்திபுரம்
முதியோர் கட்டிட்ட தொகுதியில் நடைபெற்றது
.
நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராச்சி
வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் கே
எல் எம் .நக்பீர் தலைமையில் இடம்பெற்ற
இலவச மருத்துவ முகாமில் தொற்றா நோய்களுக்கான
சிகிச்சைகளும் நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டன
தற்போது அதிகமானோர் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை இந்நோயில் இருந்து விடுபடவும்
,இந்நோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு நோயினை
குணப்படுத்தவும் சுகாதார ,போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத
திணைக்களம் விசேட மருத்துவ முகாம்களை நடாத்தி வருகின்றது .
இதன்கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் கிராம சேவை
பிரிவில் இந்த இலவச மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது
இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில்
நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராச்சி வைத்தியசாலை
உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் , மண்முனை
வடக்கு பிரதேச செயலக சுகாதார ,போசனை மற்றும் சுதேச மருத்துவ பிரிவு
உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
