
நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை!
26 ஆம் திகதிக்கு முன்னரான நிலைமையே தேவை!
-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கான 113 பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாக்களிப்பு ஒன்று நடைபெற்றால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தோ அல்லது அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசாவை பிரதமராக ஏற்றுக் கொள்வது குறித்தோ இதுவரை தாம் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளார்
_ கிண்ணியா செய்தியாளர்
