
ரணிலுக்கு ஆதரவாக சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம் பி ஒருவர் தெரிவித்தார்...
“தமிழரசுக் கட்சி ரணிலை ஆதரிக்க துணை போனால் அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும் நிலைப்பாட்டில் மாவை சேனாதிராசா எம் பி இருப்பதாகவும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அந்த எம் பி தெரிவித்தார்...
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம் பிக்கள் மட்டுமே இதுவரை ரணிலுக்கு ஆதரவான சத்தியக்கடதாசியில் கையொப்பமிட்டுள்ளதாக மேலும் சொல்லப்பட்டது.
