(முர்ஷீத்)

கோறளைப்பற்று பிரதேச கலாசார பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏ.ஜெயரஞ்சித், திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஜெ.அம்றிதா, ஜெ.அத்விஹா ஆகிய நால்வருக்கும் எழுத்துத்துறைக்கான கலைஞர் கௌரவமும், கட்டுரை, பாடல் நயத்தல், பாடலாக்கம், நாட்டார்கலை கற்றல் போட்டிகளுக்காக ஏழு வெற்றிப் பாராட்டுப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
