மட்டக்களப்பு
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள காவலரண் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில்
இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டுக்
கொல்லப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை i இடம்பெற்றுள்ளதாக
வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு
வலுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
கல்முனை நீலாவணை பகுதியை சேர்ந்த
தினேஸ் . என்ற பொலிஸ் உத்தியோகத்தரும்
காலி பகுதியை சேர்ந்த பிரசன்னா
என்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம்
இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .ஐ .என்
. ரிஸ்வி சடலங்களை பார்வையிட்டள்ளதுடன் சட்டங்களை
பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலதிக விசாரணைகளை
மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்
