
அந்தக் குழுவில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரஇ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர்கள் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
