
———- நமசிவாய வாழ்க ———-
புலன்களின் இன்பத்திலும் பெளதீக செலவத்திலும் மிகுந்த பறுதலை கொண்டு அகிலத்தில் வாழ்ந்தாலும் இறுதியில் மனிதனுக்கு ஆன்மீக நாட்டத்தை அறிந்து கொள்ளவேண்டும் துடிப்பு துளிர்விடத்தான் செய்கின்றது.
அறிதலும் தெரிதலும் மட்டும் பூரண அறிவை தந்து விடாது ஆனால் உணர்தலும் அதனால் புரிதலும் மட்டுமே ஆழமான பாடங்களை எம் எண்ணத்தில் விதைத்து விடுகின்றது.
பாலைக்கறக்கும் வரை அதன் நுட்பங்கள் தெரியாது.
பல்லை பிடுங்கும் வரை அதன் வலி புரியாது.
அதனை அனுபவத்தால் உணர்ந்தால் மட்டுமே அழமாக புரியும்.
நெருப்பு சுடும் என்று மற்றவர்கள் சொன்னால் மட்டும் சூட்டின் தன்மையை அறிந்துவிடமுடியுமா?
இதே போலவே
வெறும் கேள்வி ஞானத்தினால் மட்டுமே ஒருவன் ஞானியாகிவிட முடியாது. அத்துடன் எந்த தத்துவ ஞானியாளும் எவருக்கும் ஞானத்தையும் தூக்கி தந்துவிடவும் முடியாது.
ஆகையால் எவர் கருத்துக்களையும் கேட்போம். நன்றாக ஆராய்ந்து பார்போம். இன்னும் தேறித்தெளிந்து கொள்ள அதனை முறையாக வாழ்க்கையின் ஒவ்வெருதருணங்களிலும் பயன்படுத்திப்பார்போம்.
பயிற்சி என்றும் நன்றாக எம்மை நெறிப்படுத்தும். இங்கே ஒருவர் மேலானவர் மற்றவர் கீழனவர் என்ற ஏற்ற தாழ்வுகளை ஒதுக்கிவைத்துவிடுவோம்.
எனென்றால் எல்லா ஆத்மாக்களும் ஒன்றே. அவை அந்த பரமாத்மாவான சிவனின் சீவன்களே. ஆத்மாக்களுக்கு ஆண் பெண் என்ற வேறுபாடுகிடையது. முதியவன் இளையவன் என்ற மறுபாடுகிடையாது.
எம் ஆத்மாக்களை ஈடேற்றிக்கொள்ள என்றும் அன்பே சிவமென்று அகிலத்தில் வாழ்ந்து எவர் கருத்துக்களிலும் நற்கருத்துக்களை நன்கு ஆராய்ந்து அறிந்து எம்மை நாமே ஈடேறிக்கொள்வோம்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
