ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கிலும் அவர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் பிரதேசசபை பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள பதினெட்டு தரிப்பிடங்களை சேர்ந்த நூற்றி எழுபத்திமூன்று முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பிரதேசத்தை அடையாளப்படுத்தி 'ஸ்டிக்கர்' களும் ஒட்டப்பட்டன.
இன்று வெள்ளிக்கிழமை (30.11.2018) மாலை பிரதேசசபை முன்றலில் பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி கலந்து கொண்டதுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நந்தன ரந்தனிய பிரதேச சபையின் ஆளும்தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
