LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 28, 2018

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் அச் சத்துடனேயே நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி சுமுகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கஜா புயல் காரணமாக தென்னை மரங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தொடர் வாழ்வாதாரத்துக்கு நிவாரணத் தொகையை நம்பி காத்திருக்கின்றனர். எனவே எத்தனை தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அத்தனை மரங்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதில் விவசாயிகளின் நில அளவை கணக்கில் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மரங்களை சரியாக கணக்கிட்டு, ஒரு மரத்துக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் தொகையை அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்தால் மட்டுமே அவர்களால் விவசாயத்தை தொடர முடியும். எனவே தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முழுமையாக, முறையாக உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்

ஆனால் இந்த மீனவர்கள் பிரச்சனை கங்கிரஸ் ஆட்சிகாலத்திலேயே அதிகம் ஏற்பட்டது அதன் பின்புலம் வருமாறு

இந்திய பெருங்கடல், உலகின் மிக பெரிய மீன்களை பிடிக்கின்ற பகுதிகளை கொண்டுள்ளது. அதாவது மொத்த உலகின் மீன் பிடிக்கும் பகுதியில் 15% சதவீதம் இந்திய பெருங்கடலில் உள்ளது.(வருடத்திற்கு சுமாராக 9 மில்லியன் டன்).

இந்தப் பகுதிகளின் பெரும் பகுதிகளில் தமிழக ஈழ மீனவர்கள் நெடுங்காலம் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே ஈழப் போராட்டத்தின் முன்பு பெரிய ஆவணப்படுத்தப்பட்ட பிணக்குகள் எதுவும் ஏற்படவில்லை. யார் எப்பகுதியில் மீன்பிடிக்கலாம் என்பதை நிலைநாட்ட தமிழ் மீனவர்களுக்கு இடையே மரபுவழி வழிமுறைகள் இருக்கின்றன.

ஈழப் போர் காலத்தில் இலங்கை இந்திய கடற்படைகள் இக் கடற்பரப்பை தமது கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வந்தன. ஈழப் போராட்டத்தின் காலப் பகுதியிலும் அதனைத் தொடர்ந்தும் அப்பகுதியில் பயணிப்போர் தொழில்செய்வோர் மீது இலங்கை கடற்படை அவர்களை போராளிகள் எனக் கூறி தாக்குதல் செய்வது வழமை. இத்தகைய தாக்குதல்களும் வன்முறைகளும் ஈழப் போர் முடிந்த பின்னரும் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான எல்லைகளின் தூரம் வெறும் 12 கடல் மைல்கல் தான். இரவு நேரங்களில் மீன்பிடி படகுகளுக்கும் பைரசி எனப்ப்படும் கடல் கொள்ளையர்களின் படகுகளுக்கும் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 2006 வருடத் தகவலின் படி கிழக்கு கடல் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை மட்டுமே 1.65 லட்சம் என்று கூறப்படுகிறது அதே எண்ணிகையிலான பதிவுசெய்யப்படாத படகுகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. இது இலங்கைப் படைத்துறை தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளும் வன்முறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஒரு காரணமாக முன்வைகக்கப்படுகிறது

அத்தோடு

இந்திய அரசு பலமுறை இந்நிகழ்வுகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்தியக் கடல்பகுதியிலிருந்து இலங்கையின் கடல்எல்லைக்குள் இந்த மீனவர்கள் அத்துமீறுவதால் இலங்கை அரசு அவர்களைக் கைது செய்து, மீன்பிடி சாதனங்களையும் படகுகளையும் கைப்பற்றுவதாகக் கூறுகிறது. ஆயினும் மீனவர்கள் கைது செய்யப்படாமல் கொல்லப்படுவதாக தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சனவரி 2006ஆம் ஆண்டில் இந்திய மீனவர்கள் கடல்எல்லையை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு அவர்கள் மீறினாலும் அவர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்படாதிருக்கவும் கைப்பற்றப்பட்ட படகுகளை விரைவாக திருப்பவும் வேண்டிய வழிமுறைகளை வரையறுக்கவும் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமம் பெற்ற மீன்பிடிப்பிற்கான வாய்ப்புகளை கண்டறியவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இணை செயற்குழு செயலற்று உள்ளது.

2006ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இது குறித்து பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கட்சத்தீவை நிரந்தர குத்தகைக்கு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

2006 பிற்பகுதியில் மீண்டும் முதல்வரான கருணாநிதி இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7