சற்று முன் நிதி அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலின்படி எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் படி பெட்ரோல் 92 ஓக்டென் பெட்ரோல் லீட்டர் ஒன்று பத்து ரூபா குறைக்கப்பட்டு 145 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் ஒரு லீட்டரின் விலை ஏழு ரூபா குறைக்கப்பட்டு
116 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் விலை சூத்திரப்படி ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலையை புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக குறைத்துள்ளார்.
