
இந்நிலையில் மேற்குலகின் அழுத்தங்கள் காரணமாக எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றை கூட்டுவதட்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை முடக்குவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு ஆதரவாக வரவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வீதிகளில் தடுத்து பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதையில் அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க போவதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுசில் பிரேம்ஜயந்த இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
