கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை
வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட பிரதேச இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச
செயலாளரும் மண்முனை வடக்கு கலாசார அதிகாரசபையின் தலைவருமான மா. தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம
அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சி.யோகராஜா
கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக முன்னாள் வடகிழக்கு
மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளரும் மண்முனை வடக்கு கலாசார அதிகாரசபையின்
உபதலைவருமான எதிர்மன்னசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழ் மொழியின் சிறப்பு
எதிர்காலத்தில் தமிழ் மொழியை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதனை
வளப்படுத்துவது தொடர்பில் பல்வேறு உரைகளும் நடைபெற்றன.
அத்துடன் மண்முனை வடக்கு கலாசார
அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாவுக்கு சமாந்தரமான போட்டிகளில்
வெற்றிபெற்ற மாணவர்களும் சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
