மட்டக்களப்பு மாநகர
சபையின் நியதிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிதிச் செயற்பாடுகளின்
நகரசபைக்குட்பட்ட பகுதியில்
முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை , நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்களும் சபையால்
முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில்
மாநகரசபையில் இன்று இடம்பெற்ற 11வது
சபை அமர்வின் போது மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை நியமித்து அதனை “மீன்பாடும் தேன் நகரம் – மட்டு நகர் தினம்” என பிரகடணப்படுத்தப்படுவது தொடர்பில் மாநகர முதல்வரினால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில்
சபையின் ஏகோபித்த ஆதரவுடன் அத்தினம் பிரகடனப்படுத்தவதற்கான அனுமதி நிறைவேற்றப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எமது
மாவட்டத்தைச் சேர்ந்த நலன்விரும்பியொருவரின் கோரிக்கையின் பிரகாரம் மாநகர சபை கலை
கலாசாரக் குழு தலைவர் வே.தவராஜாவினால் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மட்டக்களப்பு
மாநகரசபையின் கலை கலாசாரக் குழுவின் தலைவர் வே.தவராஜா அவர்கள் தெரிவிக்கையில்
மிகப் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பின் விசேட அம்சங்களை
கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை அமுல்ப்படுத்த
வேண்டும். மாவட்டம் மற்றும் மாநகரம் சார்ந்த கலை வல்லுனர்கள், பற்றாளர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள், கல்விமான்கள் உட்பட சான்றோர்களை
உள்ளடக்கியதாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபை மாநகரசபையாக
பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தினை மட்டுநகர் தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
இதன் போது எமது மாவட்டத்தைப்
பிரதிபலிக்கும் அம்சங்கள் கலை கலாச்சார பண்பாட்டு விடயங்கள்
என்பன உள்ளடங்களாக இரண்டு நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் எனவும் அவர் தனது வேண்டுகோளில்
குறிப்பிட்டார்
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 11வது அமர்வில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள
உயர்வுக் கோரிக்கை தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் , ,அண்மையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரை
பௌத்த தேரர் தாக்க முற்பட்டமை தொடர்பான செயற்பாட்டிற்கு எதிராகக் கண்டனத்
தீர்மானமும் ,திருக்கோணேஸ்வரம் பகுதியை புனித
நகராக்கும் திட்டத்திற்கு ஆதரவு. அழிப்பது தொடர்பான தீர்மானங்கள்
முன்மொழியப்பட்டு சபை அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின்
11வது அமர்வில் மாநகர பிரதி முதல்வர்
க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் கே
.சித்திரவேல் ,மாநகர சபை பொறியிலாளர் த தேவதீபன்
ஆகியோர் கலந்து கொண்டனர்
