கனடாவை தளமாகக் கொண்டு இயங்கவுள்ள தட்டுங்கள்.com ( www.thattungal.com ) என்ற இணைய வழி செய்தித் தளம் இன்று வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது.
தட்டுங்கள்.com இணையத் தளத்தின் இயக்குனர் திரு.பேரம்பலம் சுதாகரன் (perampalam suthaharan) அவர்கள் கார்த்திகைத் திங்கள் முதலாம் நாளான இன்று கனடாவில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தாயகச் செய்திகள் , உலகச் செய்திகள் , கனடா செய்திகள், கலை இலக்கியம், சினிமா , ஆன்மீகம் ,விளையாட்டு, விளம்பரம் என பல தலைப்புக்களில் பல்வேறு விடயங்களைத் தாங்கி வரும் தட்டுங்கள்.com உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஏற்ற வகையில் புதிய தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தட்டுங்கள் உலகே உங்கள் கரங்களில்.






