LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 3, 2023

மாகாண, மாவட்ட போட்டிகளில் 43 தங்கப் பதக்கம் வென்று சாதனை

 (ஜெ.ஜெய்ஷிகன்)

விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டிகள் 24.06.2023ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

இதில்  06 தொடக்கம் 13 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மாவட்டமட்ட போட்டிகளும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாகாணமட்ட போட்டிகளும் இடம் பெற்றன. இப்போட்டியில் Japan karate do shotokan study association (JKSSA) கராத்தே சங்கத்தின் மாணவர்கள் 61 பேர் பங்கு பற்றி 43 தங்கப்பதக்கங்களையும், 23 வெள்ளி பதக்கங்களையும் , 14 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளதோடு 45 மாணவர்கள் தேசிய கராத்தே போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.

 இப்போட்டியானது விரைவில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு மாணவர்களை வழிப்படுத்திய எமது JKSSA   அமைப்பின் பிரதம ஆசிரியர்  sensei -  H.M.விஜயகுமார மற்றும் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான S.மனோகரன்,T. சதானந்தகுமார்,AR. நவாஸ்,R. அலோஜிதன் ஆகியோர்களுக்கு பெற்றார்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7