சதுரங்க விளையாட்டு வியாபாரமாகும் அபாயம்
(அசுவத்தாமா)
காலத்துக்கு காலம் சமூக மட்டத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னாலும் அதனை மையமாகக் கொண்டு நல்லவற்றோடு, கெட்ட விடயங்களும் நடப்பது மிகவும் சாதாரண ஒன்றாக விட்டது. மணல் கொள்ளை, கல்வியில் கொள்ளை, ஆலயங்களின் பேரில் கொள்ளை என்று பல வகைகளில் பல ஏமாற்றுக்காரர்களால் தத்தம் சுயலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வந்து எண்ணற்ற புரட்டுக்களுக்கு மத்தியில் சமகாலத்தில் வெளிநாடுகளில் உள்ள நம்மவர்களின் பணத்தினை சுரண்டுகின்ற வியாபாரமும் புதிதாக ஆரம்பமாகியுள்ளது. பொது அமைப்புக்களின் பேரில், முகநூல்களும், கடிதத்தலைப்புக்களும் புதிது புதிதாக தோன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பற்பல காரணங்களைக் கூறியும், ஏழைகளை பகடைக் காய்களாக மாற்றி அவர்களது துயரத்தினை படமாக்கி வெளிநாட்டிலுள்ள சமூக நலன்விரும்பிகளிடம் இருந்து பணத்தினைப் பெற்று, கொஞ்ச பணத்தினை பயனாளிகளுக்கு வழங்கி இதனையே தொடர் நடவடிக்கையாக்கி தாமும் பயன்பெற்று வருகின்றனர் பலர்.
ஏற்கனவே, பாடசாலையில் இருந்து, தனியார் கல்வியகம் வரை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க பெற்றோர்களின் பணத்தினைக் கல்வியின் பேரால் சுரண்டுவது போதாதென்று, இன்னும் புதிது புதிதாக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நடக்கின்ற சுரண்டல்களைக் கண்டும் காணாதது போல கடந்து போக முடியவில்லை.
தூரத்தில் நடக்கின்ற பல மோசடிகளை நாம் சாதாரண செய்திகளாகக் கருதி கடந்து போயிருந்தாலும், அது நம் மத்தியில் நிகழும் போதுதான் அதன் வலி புரிகின்றது. அவ்வகையில், நாட்டை ஆளுகின்ற அரசியல்வாதிகளின் சுரண்டல்களினால் இன்று நாடே நாசமாகிப் போய் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் சிக்குண்டு அல்லல் படுவது போதாதென்று, நம்மவர்களே நம்மை ஏமாற்றுவதைக் காணும் போது ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.
எமது நாட்டில் அண்மைக் காலத்தில் பொருட்களுக்கு விலை அதிகரிப்பதில் காட்டும் ஆர்வம் அதனைக் குறைக்கும் போது யாரும் காட்டுவதில்லை. கஸ்டமாக இருந்தாலும், அது பழகிப் போனபின்னர் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை. இந்நிலை, எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமானதாகவே காணப்படுகின்றது.
அது போன்றதொரு விடயம் பற்றியது தான் இப்பதிவும். ஏழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் நிறைந்த நம் தேசத்தில் குழந்தைகள் குறித்து ஒவ்வொரு பெற்றோருக்கும் பற்பல கனவுகள் இருக்கும்! தமக்குக் கிடைக்காத வாய்ப்புக்கள் தம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்து, நாள் கணக்காக கஸ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தினை தமது பிள்ளைகளின் கல்வி, விளையாட்டு, பிரத்தியேகக் கலைகளைக் கற்பிப்பதற்காக செலவிட்டு வருகின்றனர்.
வளர்ச்சியடைந்த நகர்ப்புறங்களில் நீச்சல், நடனம், சங்கீதம், தற்காப்புக் கலைகள், கிரிக்கட், உதைப்பந்து, சதுரங்க விளையாட்டு, தொழினுட்ப பயிற்சி நெறிகள் என பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள தமது பிள்ளைகளை சிறுவயது முதலே அத்துறைகளில் ஈடுபடுத்தி பெரும் பணத்தினை செலவு பண்ணினாலும் தமது குழந்தைகள் பல விடயங்களையும் அறிந்திருந்தால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்கின்ற நம்பிக்கையில் ஏராளமான பெற்றோர் இவற்றினை அவர்களுக்கு போதித்து வருகின்றனர்.
இருப்பினும், மட்டக்களப்பு மாவட்ட நகர்ப்புறங்களில் இதுபோன்ற விடயங்கள் பெரிதளவில் நடைபெற்று வந்தாலும் நமது வாழைச்சேனைப் பகுதியில் மிகச் சமீப காலமாகத் தான் நடனம், சங்கீதம், உடற்பயிற்சி நிலையங்கள் போன்றறை உருவாகியுள்ளன. அவ்வகையில், இலங்கையில் கடந்த 2020ம் ஆண்டுகளின் பின்னர், பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி சதுரங்க விளையாட்டுப் போட்டிகளும், அதற்கான விசேடமான பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டு ஏராளமான குழந்தைகள் சதுரங்க விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
மைதானங்களை ஆடுகளங்களாகக் கொண்டு உடல் வலிமை, பயிற்சி, திறமைக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் பல்வேறு விளையாட்டுக்களை நம் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடி வந்திருந்தாலும், தாயம், கேரம் போன்ற டீழயசன விளையாட்டுக்களைத் தாண்டி மனவலிமையினையும் மூளை வளர்ச்சிக்கும் வேகமான செயற்பாட்டிற்கும் சிந்திக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி உலக அளவில் மிகவும் பிரபலமான சதுரங்க விளையாட்டு என நாம் அழைக்கின்ற செஸ் விளையாட்டானது இவ்வருடம் தான் வாழைச்சேனையில் மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கணினியில் சிலரால் விளையாடப்பட்டு வந்திருந்தாலும், செஸ் போர்டுகளின் முன்னால் அமர்ந்திருந்து குறித்த நேரத்திற்;குள் எதிராளியின் வியூகங்களை எல்லாம் தகர்த்து வெற்றிவாகை சூடும் மனவலிமையினை நமது குழந்தைகள் பெறுவதற்கு இவ்விளையாட்டு தக்கதாய் அமைந்தது. வாழைச்சேனையில் அறிமுகப்படுத்தப் பட்டு ஒரு சில மாதங்களிலேயே இவ்விளையாட்டில் ஈடுபட்ட நமது குழந்தைகள் தேசிய மட்டப் போட்டிகள் வரை சென்று வெற்றியீட்டியது நம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.
தற்பொழுது இன்னும் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சதுரங்க விளையாட்டுப் பயிற்சிகளிலும், போட்டிகளிலும் ஈடுபடுத்த முனைப்புக் காட்டுகின்ற இத்தருணத்தில் சில விடயங்கள் குறித்த தெளிவினை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியுள்ளதுடன், எமது பிள்ளைகளுக்காக மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றவர்களிடம் பெற்றோர்கள் சார்பாக விண்ணப்பிப்பதாகவும், இப்பதிவு அமைகின்றது.
இன்றைய சூழலில் எம் மட்டக்களப்பு மக்களிடையே குறிப்பாக சிறார்களிடையே சதுரங்கம் (ஊhநளள) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விளையாட்டு பெற்றோர்களையும் சிறார்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
திறமையையும் ஆளுமையையம் வளர்த்தெடுக்கும் ஒரு விளையாட்டாக இந்த விளையாட்டு அனைவராலும் பார்க்கப்படுகின்றது. மதியூகமும் தந்திரமும் இவ்விளையாட்டிற்கு முக்கியமானவையாகும். இவ்விளையாட்டு ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப் படுவதுண்டு. சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும் மூளை சார்ந்த போர் கலையாகவும் பார்க்கப்படுகின்றது. இதில் புத்திசாலித்தனம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
நமது மூளையை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகின்றோமோ அவ்வளவு நமது மூளை வளர்ச்சியடையும். குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாட வேண்டும். அண்மைக் காலமாக பாடசாலைகளில் சதுரங்க விளையாட்டு தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றது.
செல்போனில் அதிக ஆர்வம் காட்டும் சிறார்களை மாற்றி சுய சிந்தனையாளர்களாக மாற்ற இவ்விளையாட்டு பெரிதும் உதவுகின்றது. படிப்புக்கு இடையில் இது போன்ற விளையாட்டுக்களை நம் பெற்றோர்கள் ஊக்குவிக்க இதுவும் காரணமாக இருக்கலாம்.
இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இவ்விளையாட்டு தற்போது மட்டக்களப்பு மண்ணில் பிரபல்யம் பெற்று வருகின்றது. இதனை சில மனிதர்கள் (நபர்கள்) தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தவறவில்லை. இதை வெறும் வியாபாரமாகவும் இலாப நோக்கடனும் பார்க்கும் சமூகம் இவ்விளையாட்டையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தவறவில்லை. இவ்விளையாட்டின் பால் ஈர்க்கப்பட்ட பெற்றோர்கள் நன்மை, தீமை, பலன் என்பவற்றை நோக்காது சதுரங்கப் போட்டிகளில் தங்களது சிறார்களை போட்டிகளில் பங்கு பெறச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்விடயம் மகிழ்ச்சிக்குரியதே.
ஆனால் இதனை தங்களுக்கு சார்பாக பயன்படுத்தும் மாபியாக்களை எம் சமூகத்திற்கு அறியவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். உதாரணமாக ஒரு ஊhநளள வுழரசயெஅநவெ நடாத்துவதற்கு செலவாகும் தொகை அண்ணளவாக கணக்கிடப்படுகின்றது. வுசழிhலஇ ஆநனயடஇ ஊநசவகைiஉயவநஇ யுசடிவைநசளச மற்றும் இதர செலவுகள் என 90 ஆயிரம் 100 ஆயிரம் செலவாகும் எனின் ஒரு போட்டியாளருக்கு நுழைவுப் பணமாக 1500ஃஸ்ரீ ரூபா அறவிடப்படுகின்றது.
இப்போட்டியில் 250 போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள் எனின் 3,75,000.00 ரூபா நுழைவுக் கட்டணமாக பெறப்படுகின்றது. ஒரு போட்டிக்குரிய செலவுகள் போக போட்டியினை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கு பங்காக கிடைக்கும் தொகை எவ்வளவு இதனால் அவர்கள் ஈட்டும் இலாபம் எவ்வளவு.
மேலும் சிந்தனைக்காக, ஒரு செஸ் உடரடிஆல் ரூபா 300 தொடக்கம் 600 வரை என அறவிட்டு போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்;த முடியுமானால்? ஏன் அவ்வாறான தொகையில் மற்றவர்களால் நடாத்த முடியாமல் போகின்றது. இங்கு இலாப நோக்கமே முன்னிறுத்தப்படுவது கண்கூடாகத் தெரிகின்றது.
ஏற்பாட்டாளர்கள், தமது உழைப்புக்கேற்ற இலாபத்தினைப் பெற்றுக்கொண்டு குறைந்த செலவில் நமது பிள்ளைகளுக்கு இப்போட்டிகளை நடத்தலாம். கட்டணங்கள் குறையும் போது இன்னும் அதிகப்படியான மாணவர்கள் இதில் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும், இதனால் ஏற்பாட்டாளர்கள் தாம் எதிர்பார்த்த இலாபத்தினை அடைய முடியும். அதை விடுத்து, அதிகப்படியான கட்டணங்களை அறவிட்டு, தாம் இலாபம் ஈட்டுவதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
முன்பு குறிப்பிட்டது போல இந்தச் சதுரங்கப் போட்டிகளில் தம் பிள்ளைகளை கலந்து கொள்ளச் செய்கின்ற பெற்றோர்களில் 90 சதவீதமானோர் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தோரே, சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, சாப்பாட்டுச் செலவு என பல்வேறு வகையில் தமது பிள்ளைகளுக்காகச் செலவிடும் பெற்றோர்களையும் ஒரு கணம் யாவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எதிர்காலத்தில், நமது குழந்தைகளைப் போன்று அடுத்து வருகின்ற பிள்ளைகளும் சதுரங்க விளையாட்டுக்கள் மட்டுமல்ல பல கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கான வசதி வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது போன்று, நமது ஆர்வத்தினையும், ஆசையினையும் பயன்படுத்தி இலாபமீட்டுபவர்களையும் அடையாளம் கண்டு அதில் யாரும் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது என்பதை யாவரும் உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.