அகில இலங்கை ரீதியில் நடத்தப்படட சிதம்பரா கணித போட்டியிலே தரம் 5 மாணவர்களுக்கிடையிலான போட்டியில் அகில இலங்கையில் அதிகூடிய புள்ளியினைப்பெற்று முதலாம் இடத்தினை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் ரவீந்திரன் டிலுஷாந்த் பெற்று சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற்ற மாபெரும் கணிதப்போட்டி விருது வழங்கும் விழாவில் தங்க பதக்கமும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தரம் 4 தொடக்கம் தரம் 9 வரையிலான மாணவர்களில் அதிகூடிய புள்ளியினை பெற்று முதல் இடத்தினை பெற்ற 6 மாணவர்களும் அடுத்த வருடம் இங்கிலாந்து நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்காக அனுப்பப்படுவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.