Wednesday, October 5, 2022
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வு!!
மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் நடாத்தும் வாணி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இன்று (04) திகதி மாவட்ட செயலகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் கடவுள் வாழ்த்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பஜனை, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, திருமதி.நித்தியா
விக்னேஸ்வரன் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையுரையும்,
மாணவர்களுக்கான "கலைவாணி"
கல்வி உதவி வழங்கும் நிகழ்வும்,
திருமதி.நித்தியா விக்னேஸ்வரன் நடனப்பள்ளி மாணவிகளின் குழு நடனம், பேச்சு, ஆன்மீக சொற்பொழிவு என்பன இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களினால் வாணி விழா பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது.
இந்துக்களின் மிகப்பிரதான சமய நிகழ்வுகளுள் ஒன்றாக வாணிவிழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,
காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன்,
மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மேகன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலகத்தின் கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.