Friday, September 30, 2022
'திரிய பியச' வீடமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
திரிய பியச' வீடமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் செங்கலடியில் நடைபெற்றது.
முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிதியுதவியின் கீழ் வந்தாறுமூலை கிழக்கு பிரிவில் வசிக்கும் பயனாளி குடும்பமொன்று தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வீடு அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியுடன் முதியவர் ஒருவரை கொண்டமைந்த வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்ற குடும்பமொன்றுக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை தனபலாசுந்தரம், முதியோர் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர் எல்.டபிள்யு.திலனிசுபாசினி,சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.எம்.றியாழ், கிராமசேவகர் வே.மோகனகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வீடமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.