இவனைச் சிலுவையில் அறையுங்கள்
எழுதுதித்தீரா பிரியங்கள் ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
(க.ஜெகதீஸ்வரன்)
மகுடம் கலை இலக்கிய வட்டம்
நடாத்தும் கவிஞர் வி. மைக்கல்
கொலினின் இவனைச் சிலுவையில் அறையுங்கள்,
எழுதித்தீரா பிரியங்கள் ஆகிய இரு கவிதை
நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-11-2021 ஞாயிறு மாலை
3.45 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர்
கூடத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர்
திரு. வெ.தவராஜா (கவிஞர்
ராஜாத்தி) தலைமையில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளரும், அதிபருமான திரு. ச. மணிசேகரனின்
வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்
செயலாளருமான
திரு. க. கருணாகரனும்,
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும்
மாவட்டச்செயலாளருமான
திரு. க. மகேசனும் கலந்து
சிறப்பித்து நூல்களை வெளியிடவுள்ளனர்.
மட்டக்களப்பு
தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.
றஞ்சிதமூர்த்தி மற்றும் யுனைட்டட் புத்தக
நிலைய உரிமையாளர்
திரு. பா. செல்வராஜாJP.யும்
முதல்பிரதிகளைப் பெற்றுக்கொள்ள நூல்தொடர்பான நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர்
செ. யோகராசாவும், அதிபரும், கவிஞருமான கவின்மகள் சுதாகரியும் நிகழ்த்தவுள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க
அமைச்சின் பணிப்பாளர் நாயகம் இரா. நெடுஞ்செழியன்,
ஓய்வு நிலை கிழக்குமாகாண இளைஞர்
சேவைகள் மன்ற பணிப்பாளர் திரு.
பொன். செல்வநாயகம், மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி
ஓய்வு நிலை முகாமையாளர் திரு.
எஸ். வி. சுவேந்திரன், கிழக்குப்
பல்கலைக்கழக டாக்டர். எஸ். சிவச்செல்வன் ஆகியோர்
சிறப்பதிதிகளாக கலந்து
கொள்ளும் இந் நிகழ்வில் கவி
வாழ்த்தினை கதிரவன் பட்டி மன்ற
தலைவரும் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்க
பொருளாளருமான கவிஞர். த. இன்பராசா
நிகழ்த்த நன்றியுரையினை நூலாசிரியர் மகுடம். வி. மைக்கல்
கொலின் ஆற்றுவார்.
இந் நிகழ்வை கவிஞர் சோலையூரான்
ஆ. தனுஸ்கரன் தொகுத்து வழங்கவுள்ளார்.