(கல்லடி நிருபர்)
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வானது, மகுடம் பதிப்பக இயக்குனரும், மகுடம் கலை இலக்கிய வட்ட தலைவருமான
வி.மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
கவிதை நூலை வெளியிட்டுவைத்துள்ளார்.
நூலின் முதல் பிரதியை ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.டேவிட் பெற்றுக்கொண்டதுடன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் நூல் நயவுரையை ஆற்றியிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்குடா வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டதுடன்,
நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை அதிபரும், எழுத்தாளருமான ச.மணிசேகரன் வழங்கியதுடன், நன்றியுரையினை நூலாசிரியர் கவிஞர் மன்னனூர் மதுரா ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.