LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 3, 2020

வடமராட்சி மீனவர்கள் உட்பட 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

குடாரப்புக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் நெருக்கமாகப் பழகினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ஒன்பது பேருடன் தொடர்புடைய வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 70 பேரும் மன்னாரைச் சேர்ந்த 11 பேரும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வாடி அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் மூன்று படகுகளில் கடந்த 29ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற படகு ஒன்று இந்திய இழுவைப் படகுடன் மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார். அவரை ஏனைய மீனவர்கள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கரை திரும்பிய ஒன்பது மீனவர்களும் வாடியில் உள்ள ஏனையவர்களுக்கு நடந்தவற்றைத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய மீனவர்களுடன் பழகிவிட்டு வந்துள்ளனர் என்ற அச்சம் கொண்ட மன்னாரைச் சேர்ந்த 11 மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்விடயம் சுகாதாரத் துறையினரக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுச் சுகாதாரப் பரிசோதர்களால் கண்காணிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7