கனடாவின் பிற பகுதிகளிலுள்ளவர்களை நியூ பிரன்சுவிக்குள் அனுமதிப்பது தொடர்பாக, எச்சரிக்கையாக இருப்பதாக மாகாண முதல்வர் பிளேன் ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கியூபெக்கில் உள்ள இரண்டு எல்லை நகராட்சிகளில் வசிப்பவர்கள் மாகாணத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவதாக ஹிக்ஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘செப்டம்பர் 8ஆம் திகதி நியூ பிரன்சுவிக் மாணவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்வதுடன் மீண்டும் திறப்பது குறித்து நான் கவலைப்படுகின்றேன்.
மீண்டும் மக்களை அனுமதிப்பதற்கு சுற்றுலாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே காரணம். கோடைக்கால சுற்றுலா காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரண்டு வாரங்களில் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என கூறினார்.