கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென தற்போது கூறும் ஜனாதிபதி மூன்று மாதங்கள் தூக்கத்தில் இருந்தாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான நிலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரொனா பரிசோதனைகளை அதிகரியுங்கள் என இன்று ஜனாதிபதி கூறுகிறார் இவ்வாறென்றால் மூன்று மாத உறக்கத்தில் இருந்து இன்றுதான் விழித்தாரா என கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இந்நாட்டில் 40 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களை கண்டறிய உடன் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என மூன்று மாதங்களுக்கு முன்னரே கூறியதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
அன்று கூறியபோது மனோகணேசன் பொய் உரைக்கின்றார் என கூறி தேரர் உட்பட பலர் தன்னை கைது செய்ய கோரியதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அடிக்க முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிகுமாறும் அவர் வலியுறுத்தினார்.