ஜக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் எழுச்சி ஆதரவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது ஜக்கிய தேசியக் கட்சி என்பது ஜக்கியமும் தேசியமும் இருப்பதன் காரணத்தினால் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது என ஜக்கிய தேசிய கட்சி முன்னாள் நடாளுமன்ற உறப்பினர் ரவிகருணநாயக்கா
இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று 8 மாதங்களில் தந்திருக்கின்ற ஒரே ஒரு பரிசு கொரோனா இதற்கு ஒரு தீர்வு இல்லை எனவே அவர்களின் அநீதிகளுக்கு எதிரா மக்கள் ஒன்றினைந்து ஜக்கிய தேசிய கட்சியை கட்டியொழுப்பவேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணநாயக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கட்சி சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை ) வாடிவீடு விடுதியில் இடம்பெற்றது இதில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஒரு தீர்மானம் மிக்க தேர்தலாக இதனை பார்க்கின்றோம் சாதாரணமாக தேர்தல் காலத்தில் கருத்து கணிப்பு செய்வோம் அந்த கருத்துக் கணிப்பின்படி ஜக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் எழுச்சி ஆதரவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது ஜக்கிய தேசியக் கட்சி என்பது ஜக்கியமும் தேசியமும் இருப்பதன் காரணத்தினால் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது
எங்களுடைய எண்ணங்களும் செயற்பாடுகளும் கொழும்பில். அம்பாந்தோட்டையில் மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தில் திருகோணமலையில் வெவ்வேறு முகமாக இல்லை இலங்கையில்; ஒரேமுகமாகத்தான் எமது செயற்பாடு இந்த தருணத்தில் எங்களுடைய நாடு எங்களுடைய பௌத்தர்கள், இந்துக்கள் ,முஸ்லீம்கள் என ஒன்றுபட்டு செயற்படவேண்டியுள்ளது அந்த வெற்றிக்கு ஒரேஒருவழி ஜக்கிய தேசிய கட்சி தான்
அந்த அடிப்படையில் கட்சி இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் மட்டக்களப்பில் கைகொடுத்திருக்கின்றனர் இவர்களை கட்சி ஒருபோதும் மறக்காது. அடுத்த கிழமை ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு வரவுள்ளார் எனவே கட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கவும்.
எங்களுடைய பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டு எங்களுடைய கட்சியின் வளங்களை பெற்றுக் கொண்டு முன்னேற்றமடைந்தவர்கள் இன்று எங்களுக்கு எதிராக வெளியே சென்று போர்கொடி செய்கின்றனர் அவர்கள் அவர்களுடைய சுய திட்டத்தை உயர்த்துவதற்காவே தவிர மக்களுடைய திட்டத்திற்காக அல்ல.
எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவாகள் ரவிகருணாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் யானை கட்சி நல்லதில்லை என்கிறார்கள் ஆனால் யானையின் வாலில் தூங்குவதற்கு விருப்பமாக இருக்கின்றனர். இது தான் உண்மையான மாற்றம்
ஏங்களுடைய போட்டி மொட்டுகட்சியுடன் மாத்திரம் கடந்த 8 மாதங்களாக அவர்கள் எடுத்திருக்கின்ற அநீதிகளுக்கு எதிரா மக்கள் ஒன்றினைந்து வாக்களித்து கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்றார்.