வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், “கூட்டமைப்பினர் பலமுறை எம்மை ஏமாற்றி விட்டார்கள் சென்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவருக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்து நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி அமைத்தார்கள் அன்றிலிருந்து இன்று எமக்கு எந்த பயனும் எட்டப்படவில்லை.
இம்முறை வாக்களிக்கும் மக்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள் சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்கும்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் கேட்டுள்ளார்கள்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கும் போது இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் விடுதலைப் புலிகள் கொண்டு உள்ளார்கள் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.