கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் தீவிரத்தன்மை தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய குறித்த சங்கத்தின் தலைவர் சேனல் பெர்னாண்டோ, கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளைத் தடுக்க குறைந்தபட்சம் 68,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலைகளைத் தடுக்க சுகாதாரத் துறையினருக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளரை அவர் கேட்டுக்கொண்டார்.