சென்னையில் பொலிஸார், அரசு அவலர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் பொலிஸ் துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர் கோயம்பேடு சந்தைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் கோயம்பேடு பகுதியில் அடிக்கடி ஆய்வுக்குச் சென்றநிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் அலுவலராக பணியாற்றிவரும் 28 வயதான அந்தப் பெண், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.