தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்கள் எதிர்வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.
மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரிகள் இதற்கென அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு தேவையாக வழிகாட்டல்களை திட்டமிடுவதே இதன் நோக்கமாகும்.
சமூக விலகல் உட்பட சுகாதார பிரிவின் பரிந்துரைகள் குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.